கள் வெறி எப்படி இருக்கும் ?
பாரதி.. இந்த பேரைக் கேட்டாலே நிறைய பேருக்கு மனதிற்குள் ஒரு குதுகலிப்பு வந்துவிடும். தமிழ் அறிந்தவர்களுக்கு பாரதியைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதனால் இது பாரதியைப் பற்றியப் பதிவு அல்ல... ;-) வேற என்ன? வாங்க சொல்றேன். கள்ளு குடிச்சு இருக்கீங்களா? அதன் போதை என்றால் என்னவென்று தெரியுமா? அது குடிச்சா எப்படி வெறி வரும். குடிச்சு பழக்கம் உள்ளவங்க அதை நினைச்சுக்கங்க... குடிக்காதவங்க அதைக் கற்பனையை தட்டி விட்டு வெறி ஏற்றும் போதையை நினைச்சுக்கங்க..
அப்படியே வடகரை வேலன் அண்ணாச்சியின் இந்த பதிவைப் படிங்க.. ஆச்சா? இனி நம்ம மேட்டருக்குப் போகலாம். சின்ன குழந்தைகளைப் பார்க்கும் போது மனம் அப்படியே பரவசமடையும். பஸ்ஸ்ல், இரயிலில் போகும் போது சிறு குழந்தைகள் சிரிக்கும் போது அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் போல் தோன்றும். மனித மனம் உள்ள எல்லாருக்கும் இது இயற்கை தான்.
அப்படியே இதில் இன்னும் கொஞ்சம் உள்ளே நுழைந்தால் பெற்றவர்களைக் காட்டிலும் தாத்தா-பாட்டிகளுக்கு பேரப் பிள்ளைகளின் மீது பாசமும், கொஞ்சுதலும் மிக அதிகமாக இருக்கும். குழந்தையின் தந்தை இளம் வயதாக இருப்பார். தொழில், வேலை என்று ஆயிரத்தெட்டு டென்சன் இருப்பதாக அவராகவே மனதிற்குள் நினைத்துக் கொள்வார். பெற்ற பிள்ளையை தூக்கிக் கொஞ்சாத நிறைய அப்பாக்களைப் பார்த்து இருக்கின்றேன்.
அதே போல் அம்மாவுக்கும் குழந்தை மீது அதீத பாசம் இருந்தாலும், கொஞ்சுதல் என்பது கொஞ்சம் குறைவு தான். சிறு பிராயத்தில் எப்போதுமே தன்னுடனே வைத்து இருப்பதாலும், அவ்வப்போது மலம், ஜலம் பிரச்சினைகள், தூங்கினால் நாம கொஞ்சம் ஓய்வு எடுக்கலாமே என்ற எண்ணங்களாலும் கவனிப்பு இருக்கும் அதே நேரம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். கொஞ்சம் பெரிதானதும் வழக்கமான பெற்றோர்களின் ’கண்டிப்பு’ காரணாமாக கொஞ்சல் என்பது குறைந்து விடுகின்றது.
கொஞ்சம் வயதானதும் இதை ரியலைஸ் செய்து பார்க்க முடிகின்றது அவர்களால்.. அப்போது அவர்கள் தாத்தா அல்லது பாட்டியாக மாறி இருக்கும் கட்டமாக இருக்கின்றது. ஓடி ஓடி களைத்து விட்டு இருக்கின்றனர். தமது இளம் வயதில் கொஞ்சாத கொஞ்சல்களை முதிய வயதில் கொஞ்ச ஆரம்பிக்கின்றனர்.
ஒரு சுவையான செய்தி.. சமீபத்தில் நண்பர் கானாபிரபாவின் சிட்னி தமிழ் வானொலி ஒளிபரப்பை இணைய வழியாக கேட்டுக் கொண்டு இருந்த போது ஒரு பெண்மணி வானலை ஊடாக வந்தார். அன்றைய நிகழ்ச்சி மகாகவி பாரதி பற்றியதாக இருந்தது. அந்த அம்மணி தனது பேரப் பிள்ளைகளைக் கொஞ்சுவதைப் பற்றி கூறும் போது பாரதியின் சின்னஞ் சிறு கிளியே பாட்டைப் பற்றி குறிப்பிட்டு விட்டு இந்தவரியை நினைவு கூர்ந்தார்.
“கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி”
இவ்வரி தமக்கு வெகுவாக பொருந்துவதாக கூறினார். தனது பேரப்பிள்ளைகளைக் கொஞ்சும் போது கண்ணு மண்ணு தெரியாமல் என்று சொல்வேமே அது போல் கொஞ்சுவதாகக் கூறினார். இதனால் தனது மகளுக்கும், அவருக்கும் பிணக்கு கூட வருமாம். பிள்ளையை அம்மாவிடம் கொடுத்தால் கொஞ்சுகிறேன் என்று கசக்கி,பிசக்கி விடுவதாக குற்றச்சாட்டாம்..
ஆம்.. குழந்தைகளைக் கொஞ்சும் போது அவர்கள் பாசத்தின் உச்சியில் இருக்கின்றனர். இதைப் பாரதி சொல்லும் போது கள்வெறியோடு ஒப்பிடுகின்றான். பாரதி கள் குடித்தானா இல்லையா என்பதோ, சிறு பிள்ளைகளிடம் பாடும் போது கள் பற்றி ஏன் சொன்னான் என்பதோ இங்கு வழக்கல்ல... ஆனால் அவன் கூறிய உவமையைப் பாருங்கள். ஒரே வரிதான்.. குழந்தைகளைக் கொஞ்சுவது ஒரு வெறி.
கள்வெறிக்கு ‘நற்குடி’ போல் விளக்கமெல்லாம் சொல்ல இயலாது. அது குடித்தவன் அடையும் வெறியா என்பதோ, குடித்தவனைக் காணும் போது மற்றவர்கள் அடையும் வெறியா என்பதும் தெரியாது. மனதிற்குள் இருக்கும் அகம்பாவங்களையும், நான் குழந்தையைக் கொஞ்சுவதா என்ற திமிரையும் உடைப்பில் போட்டும் குழந்தைகளை முழு மனதுடன் கொஞ்சும் போது ஒரு வெறி வருகின்றதா என்று அடுத்த முறை பாருங்கள்..
அப்படியே ரெண்டு குறளையும் சொல்லி விடுகின்றேன்.
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. 65
குழந்தைகளை தொட்டு தூக்கி அவர்களுடன் ஒட்டி உறவாடுவது தான் உடலுக்கான இன்பன். அவர்களுடைய இனிமையான சொற்களைக் கேட்பதுதான் காதுக்கான இன்பம்.
குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். 66
குழந்தைகளுடைய அழகான மழலை மொழியைக் கேட்காம இருப்பாங்களே அவங்கதான்., குழல் இசை ரொம்ப சூப்பரா இருக்கு, யாழின் இசை சூப்பரா இருக்கு அப்படின்னு சொல்லுவாங்க.
டிஸ்கி : ரொம்ப நாள் எழுதாதனால் வழவழ கொழகொழன்னு வருது.. மன்னிச்சு படிங்க மக்களே.
படம் நன்றி : ப்ளிக்கர் தளம்
9 comments:
//ரொம்ப நாள் எழுதாதனால் வழவழ கொழகொழன்னு வருது.. மன்னிச்சு படிங்க மக்களே.///
பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்கப்பு!
நல்லா இருக்கு ! அன்னிக்கு அந்த நிகழ்ச்சியை நானும் கேட்டேன்! அந்த பெண்மணியின் தன் பேரக்குழந்தைகள் பற்றிய உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் நெகிழ வைத்தது!
சரி நீங்க ரொம்ப பிஸிதான் ஒத்துகிறெஒம்!!!
குழந்தைகள் எப்பொழுதும் நெகிழ வைப்பவர்களாவே இருக்கிறார்கள்.
அன்பின் தமிழ் பிரியன்
மழலைகளைக் கொஞ்சுவது நிச்சயம் மகிழ்வினைத் தரும். அதுவும் பேரன் பேத்திகள் - அடடா - அவர்களுடன் செலவிடும் நேரம் தான் வாழக்கையில் செலவழித்த நல்ல நேரம்.
நல்லதொரு இடுகை
நல்வாழ்த்துகள்
:)
லைவ் ஷோ இங்கே
நல்ல இடுக்கை :)
ம்ம்ம் சரி சரி குழந்தை ஞாபகமா?
உண்மைதான். பேரக்குழந்தைகளுடன் அவர்கள் கொஞ்சும்போது பார்க்கும் நமக்கே பொறாமையாக இருக்கும்.
மேலும் முதுமை என்பது இரண்டாம் குழந்தைப் பருவம் என்பதால், அலைவரிசை அழகாக ஒத்துப் போகும் அவர்களுக்குள்!!
அருமை தமிழ் பிரியன்.
Post a Comment