இரயிலின் நிறம் - சர்வேசனின் நச் கதைப் போட்டிக்கு எழுத நினைத்தது.
இரயில் பயணமே பிடிக்காத சுசிலாவுக்கு இப்போது இருந்த நிலை அவளது எரிச்சலை மேலும் அதிகரிக்கச் செய்து இருந்தது. இரயிலுக்கு முன்பதிவு செய்யாமல் கோட்டை விட்டு விட்டு, தூங்கி வழிந்து கொண்டு இருந்த கணவனையும் ஆத்திரத்துடன் அவ்வப்போது பார்த்துக் கொண்டு இருந்தாள். இரயிலில் முன்பதிவு செய்யாத பெட்டியில் ஏறிய போது எல்லாம் நல்லபடியாகத் தான் இருந்தது. ஜன்னலோர இருக்கையில் மகளை அமர்த்தி விட்டு, அவளுக்கு எதிரே சுசிலா அமர்ந்து கொண்டாள். இவளை அடுத்துக் கணவன்.
இரயில் கிளம்பும் நேரம் நெருங்க கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. ஆனாலும் ஜன்னலோர இருக்கைகள் முதலிலேயே கிடைத்த மகிழ்ச்சியில் தான் அவள் இருந்தாள் அந்த குடும்பம் வந்து சேரும் வரை. கிராமத்தை சேர்ந்த அந்த குடும்பமும் சென்னை தான் செல்கின்றதாம். அந்த கிராமத்துப் பெண், அவளை அடுத்து மகன். அவர்களைப் பார்க்கும் போது சுசிலாவுக்கு அறுவெறுப்பாக இருந்தது. அந்த பையனுக்கு வயது 15,16 இருக்கும். முகத்தில் கிராமத்தான் என்ற தோரணையோடு ரவுடித்தனமும் ஒட்டி இருந்தது.
மகளின் முகத்திலும் அம்மாவின் அசூசை ஒட்டிக் கொண்டது. தன்னை அடுத்து உட்கார்ந்து கொண்ட அந்த கிராமத்துப் பெண்ணுடன் ஒட்டி விடாமல் பார்த்துக் கொண்டாள். இரயில் இரண்டு மூன்று ஸ்டேசன்களைக் கடந்து ஓட ஆரம்பித்து இருந்தது. கிராமத்துப் பெண்ணை அடுத்து உட்கார்ந்து இருந்த அந்த பையன் தூக்கத்தில் சாய ஆரம்பித்து இருந்தான். மகன் தூங்க வசதியாக முன்னால் நகர்ந்து உட்கார்ந்து கொண்டு மகனை படுக்க வைத்துக் கொண்டாள். அவளது தூங்கி வழிய ஆரம்பித்து இருந்தாள். தூக்கத்தில் முந்தானை விலகல்களைக் கூட சரி செய்ய மறந்தவளாய் இருந்தாள்.
அந்த பையனும் கால்களை நீட்டிப் படுத்துக் கொண்டது சுசிலாவின் ஆத்திரத்தை எல்லை மீறச் செய்து கொண்டு இருந்தது. அவனது கால் தன் மகளின் மீது படும் என்பதைப் போன்ற பிரமையில் உழன்று கொண்டு இருந்தாள். தூங்கி வழியும் கணவனைக் காணும் போது எரிச்சலின் அளவு மிகுதியாவதை உணர்ந்தவளாய் இருந்தாள். அந்த கிராமத்துப் பெண்ணின் பயமுறுத்தும் தோற்றமும், கூட்ட நெரிசலும் அவளை தயக்கத்தில் உறைய வைத்து இருந்தது.
சுசிலா முற்றிலும் தூக்கத்தை இழந்தவளாக தவித்துக் கொண்டு இருந்தாள். மகளை அருகே அழைத்துக் கொள்ளவும் வசதி இல்லாமல் இருக்கைகளிலும், கீழேயும் ஆட்கள் தூக்கக் கலக்கத்தில் இருந்தனர்.
தனது கால் ஜன்னலோரம் அமர்ந்து இருக்கும் தன் வயதை ஒத்த சிறுமியை தீண்டும் எந்த பிரஞ்யையும் இல்லாமல் அச்சிறுவன் கனவில் விஜய் போல எங்கேயே தூர தேசத்தில் பறந்து பறந்து சண்டையிட்டுக் கொண்டு இருந்தான். அச் சிறுமியோ ஜன்னலோர எதிர்காற்றின் குளிர்ச்சியில் உறங்கியவளாய் கனவில் தனது தோழிகளுடன் வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டு இருந்தாள்.
இதுவரை தூங்குவது போல் நடித்துக் கொண்டு இருந்த சுசிலாவின் அருமைக் கணவன் ஓரக் கண்களால் கிராமத்துப் பெண்ணின் முந்தானை விலகலை ரசித்துக் கொண்டே தனது கால் விரலால் அப்பெண்ணின் கால்களுக்கு கனெக்சன் கொடுக்க முனைந்து கொண்டு இருந்தான்.
டிஸ்கி : இந்தக் கதை அல்லது இது போன்ற ஒரு கதையை சர்வேசனின் நச் கதைப் போட்டிக்காக எழுத நினைத்து இருந்தேன். கதையில் நச்சுத் தன்மை அதிகமாக இருந்த காரணத்தாலும், சூழலின் சதியின் காரணமாகவும் கதை முடிவுகள் வந்தபின் இக்கதைக்கு விடிவு கிடைத்திருக்கின்றது.

9 comments:
1
:)
!
‘நச்’ எங்கண்ணே? :)
இங்கேயும் போட்டி நடக்குதுண்ணே. http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html
கலந்துக்கங்க
//‘நச்’ எங்கண்ணே? :)//
ம்
//அப்பெண்ணின் கால்களுக்கு கனெக்சன் கொடுக்க முனைந்து//
இதுக்கு பிறகு ஒரு பளார்ன்னு ஒரு அறை விழும்ல அதாம்ல !
அவ்வ்வ்வ்! நச்-ஐ தப்பா புரிஞ்சுக்கிட்டீங்களா, நச்சுனு! :-))))
:)))
:))
Post a Comment