கதை, கதையாம்.. காரணமாம்
சுசி அக்கா ரொம்ப நாளைக்கு முன்னாடி பதிவு எழுத வந்த கதையை எழுதச் சொல்லிக் கேட்டு இருந்தாங்க... முக்கால்வாசி எழுதி டிராப்ட்டில் வைத்திருந்த நிலையில் பதிவை காக்கா தூக்கிட்டுப் போய்டுச்சு.. அதனால் திரும்பவும் எழுத உட்கார்ந்தாச்சு.
2002, 2003 ரேஞ்சில் தான் இணையமே அறிமுகமாச்சு.. அப்ப.. ஹலோ.. விண்டோவை குளோஸ் பண்ணாதீங்க.. தலைநகரம் வடிவேலு ரேஞ்சுக்கு எல்லாம் கதை சொல்ல மாட்டேன். ஷார்ட்டாவே சொல்றேன்.. கேட்டுக்கங்க..
எங்க வேலை சம்பந்தமான தேடல்களுக்கு தான் முதலில் இணையம் பயன்பட்டது. சில ஆண்டுகளில் இஸ்லாம் பற்றிய தேடலும் அதிகமாகி இருந்தது. சில உரைகளின் நடுவே “போலி”யான இணைய தளங்களின் மூலம் அவதூறூகள் பரப்பப்படுவதாக கேட்க நேரும். அதென்னடா போலிகளின் இணைய தளம்ன்னு தேடப் போன இடத்தில் பார்த்தால்.. நம்ம தமிழ்மணத்தில் நிலவிய பூசலில் உட்சபட்ச தளத்தில் போய் விட்டது.
அப்போது அங்கு நறு’மணம்’ வீசிக் கொண்டிருந்த காலம். அதில் பல இடுகைகளை படிக்க நேர்ந்தது. அங்கிருந்து அப்படியே கறுப்புப்பையன், டோண்டு, என்று தளம் இடம் மாறி இழுத்துச் சென்றது. ஆகா... இப்படி எல்லாம் எழுத வாய்ப்பு இருக்கா என்று ரொம்ப ஆவலாக உள்ளே நுழைந்து விட்டேன். எங்க கண்மணி டீச்சர், அபி அப்பா, துளசி டீச்சர், என்று தளம் சரியான பாதையில் பிரயாணிக்க ஆரம்பித்தது.
குர்ஆன், ஹதீஸ் நூல்களை மென்னுலாக்கி இணைய வழியே நிறைய பேரை சென்றடைய வைக்க வேண்டும் என்று முதன் முதலில் ஒரு பதிவைத் திறந்தேன். சில மாதங்களில் என்னோட எண்ணங்களையும் எழுத வேண்டும் என்று இது என்னோட இடம்ன்னு ஒரு இடத்தை ப்ளாட் போட்டு எழுத ஆரம்பிச்சாச்சு.. ஓடிக்கிட்டே இருந்தது, கூகுள்காரன் இப்ப தடை செய்து வைத்து இருக்கான். அதனால் என்னன்னு இங்க எழுத ஆரம்பிச்சாச்சு.. இனி தொடரலாம்.
11 comments:
பழைய தளம் கிடைக்கலியா. ஒருசிலருக்கு திரும்பகிடைச்சிருக்கே
பழைய தளமும் சீக்கிரமே கைக்கு வர வாழ்த்துக்கள். அதுவரை இங்கே தொடருங்கள்:)!
முக்கால்வாசி எழுதி டிராப்ட்டில் வைத்திருந்த நிலையில் பதிவை காக்கா தூக்கிட்டுப் போய்டுச்சு.. //
பதிவை காக்கா தூக்கிப்போற வரைக்கும் நீங்க என்ன செஞ்சிட்டு இருந்தீங்க :))))
அதானே என்ன செய்தீங்க
-----------
நல்ல காரணம் நல்ல கதை. ;)
கூகுளுக்கு மெயிலுக்கு மேல மெயில் போட்டாச்சி.. இன்னும் பதிலைக் காணோம்... :(
//தமிழ் பிரியன் said...
கூகுளுக்கு மெயிலுக்கு மேல மெயில் போட்டாச்சி.. இன்னும் பதிலைக் காணோம்... :(///
என்னா அலட்சியம் பயபுள்ளக்கி - நான் கூகுள சொன்னேன்!
//ஆயில்யன் Says:
December 17, 2009 8:35 AM
//தமிழ் பிரியன் said...
கூகுளுக்கு மெயிலுக்கு மேல மெயில் போட்டாச்சி.. இன்னும் பதிலைக் காணோம்... :(///
என்னா அலட்சியம் பயபுள்ளக்கி - நான் கூகுள சொன்னேன்!//
:)))
ஆயில்யன் said...
//தமிழ் பிரியன் said...
கூகுளுக்கு மெயிலுக்கு மேல மெயில் போட்டாச்சி.. இன்னும் பதிலைக் காணோம்... :(///
என்னா அலட்சியம் பயபுள்ளக்கி - நான் கூகுள சொன்னேன்!//
அதனானே, வடுவா திருப்பு கொடுத்துட்டு ஓடிப்போயிடு (கவுண்டர் பாஷையில்)
தல உங்க கதையையை ஹைக்கூவா முடிச்சிட்டீங்க, புது டெம்ப்ளேட் மாத்துறவங்களைப் பார்த்துக் கடுப்பாயித் தான் ப்ளாக்கர் பிச்சுக்குதாமே
அப்ப பழை ய பதிவுகள்? என்னோடது வேற IE ல எரர் னு நட்புடன் ஜமால் பயம் காட்டுறார். வேற டம்மி பிலாக் ரெடி செய்தா பிலாக் இம்போர்ட் ஆகல.
ஹூம் என் பிலாக் காக்காய் தூக்கிட்டா ஒன்லி டாட்டா பை பை தான்
நல்ல இருங்க மக்கா
:)
நல்லா இருக்கு.
ஒருவேளை விட்டுப்போன கதை எல்லாம் காக்கா தூக்கிப் போன பதிவில எழுதிட்டீங்களோ????
எனக்கும் உங்க கா தூ போ ப்ளாகால மிரட்டல் வருது..
அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்....
Post a Comment