Saturday, December 12, 2009

ஆதரவு தாங்க மக்களே!

இந்த கூகுளுக்கு கொஞ்சம் பொறுப்பு உணர்ச்சி அதிகமாகிப் போச்சு போல... ஏகப்பட்ட வைரஸ்களைப் பரப்பும் பதிவுகளை விட்டுவிட்டு என்னைப் போன்ற அப்பாவிகளின் பதிவை முடக்கி வச்சு இருக்காங்க.... என்னத்த சொல்ல... சரி அதுக்காக நாம எழுதுவதை அடக்கி வைக்க முடியாதுல்ல... புது பதிவைத் திறந்தாச்சு. பழைய பதிவை காப்பி எடுத்து கூட வைக்கலை. ஆனா ரீடரில் இருப்பதால் பிரச்சினை இல்லை. நேரம் இருக்கும் போது கொஞ்சம் கொஞ்சமா இதுல சேர்த்துடலாம்.

அதற்குள் கூகுள்காரன் நம்ம ப்ளாக்கை திரும்பக் கொடுத்து விட்டால், மீண்டும் பழைய வீட்டுக்கே போய் விடலாம். எல்லாம் வரிசையா வந்து வாழ்த்து சொல்லிவிட்டு போங்க மக்களே.. இனி நான் ரொம்ப பிஸி. நிறைய பதிவு எழுத வேண்டிய வேலை இருக்குல்ல... எல்லாம் இந்த பதிவு தமிழ் மணத்தில் சேர்க்கப்பட்டதும் வரிசையா வர ஆரம்பிக்கும்.

அன்புடன்
தமிழ் பிரியன்

34 comments:

ஆயில்யன் December 12, 2009 8:55 PM  

//எல்லாம் வரிசையா வந்து வாழ்த்து சொல்லிவிட்டு போங்க மக்களே../

வாழ்த்து சொல்றோம் ! சோறு போடுவீங்களா?

தமிழன்-கறுப்பி... December 12, 2009 9:34 PM  

வாழ்த்துக்கள் தல..!

தமிழன்-கறுப்பி... December 12, 2009 9:35 PM  

கூகுளுக்கு இப்பவே ஒரு மெயில் அனுப்பிடுங்க.

:)

தமிழன்-கறுப்பி... December 12, 2009 9:36 PM  

தீவிர இலக்கியவாதியாக மாறிட வாழ்த்துக்கள்.

:))

☀நான் ஆதவன்☀ December 12, 2009 9:38 PM  

////எல்லாம் வரிசையா வந்து வாழ்த்து சொல்லிவிட்டு போங்க மக்களே..//

எம்புட்டு பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமாண்ணே....

வாழ்த்துகள் :)

gulf-tamilan December 12, 2009 10:12 PM  

கூகுளூக்கு வாழ்த்துக்கள்!!!சரியா :)))

gulf-tamilan December 12, 2009 10:16 PM  

ஸாரி உங்களுக்கு வாழ்த்துக்கள்

கிரி December 13, 2009 1:06 AM  

அடப்பாவிகளா! தமிழ் பிரியன் ரொம்ப வருத்தமா இருக்கு..கூடவே பயமாவும் இருக்கு..நம்ம தளம் என்னைக்கு சங்காக போகுதோன்னு!

விரைவில் உங்க தளம் கிடைக்க வேண்டுகிறேன்

TechShankar @ டெக்‌ஷங்கர் December 13, 2009 3:24 AM  

என்ன கொடுமை சார் இது?

அளவுக்கு அதிகமா பின்னூட்டம் போட்ற ப்ளாக்கும், அளவுக்கு குறைவா பின்னூட்டம் வாங்கற ப்ளாக்கும் இப்படி ஆகிடுது. ஹ்ம்ம். சரி புது வீட்டுக்கு வந்திருக்கீங்க. வாழ்த்துகள்.

நிஜமா நல்லவன் December 13, 2009 5:05 AM  

வாழ்த்துக்கள் தல..!

நிஜமா நல்லவன் December 13, 2009 5:06 AM  

/ஆயில்யன் said...

//எல்லாம் வரிசையா வந்து வாழ்த்து சொல்லிவிட்டு போங்க மக்களே../

வாழ்த்து சொல்றோம் ! சோறு போடுவீங்களா?/

நாலு அண்டா சோறு பார்சலேய்ய்ய்ய்...

நிஜமா நல்லவன் December 13, 2009 5:10 AM  

/தமிழன்-கறுப்பி... said...

தீவிர இலக்கியவாதியாக மாறிட வாழ்த்துக்கள்.

:))/


தல இலக்கியம் ரொம்ப முக்கியம்....மிஸ்சானா அம்புட்டுதான்:))
கறுப்பி ஏதோ உள்குத்து வச்சி வாழ்த்துற மாதிரி இருக்கு...:))

நிஜமா நல்லவன் December 13, 2009 5:12 AM  

/கிரி said...அடப்பாவிகளா! தமிழ் பிரியன் ரொம்ப வருத்தமா இருக்கு..கூடவே பயமாவும் இருக்கு..நம்ம தளம் என்னைக்கு சங்காக போகுதோன்னு!/

கிரி அண்ணே ....எனக்கு இந்த கவலை எல்லாம் இல்லை....நான் உருப்படியா இதுவரைக்கும் ஒரு இடுகை கூட போடலை...என்னைய மாதிரி இருக்க கத்துக்கோங்க:))

நிஜமா நல்லவன் December 13, 2009 5:13 AM  

/ ☀நான் ஆதவன்☀ said...

////எல்லாம் வரிசையா வந்து வாழ்த்து சொல்லிவிட்டு போங்க மக்களே..//

எம்புட்டு பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமாண்ணே....

வாழ்த்துகள் :)/


நீங்க சொல்லுறதை பார்த்தா அவரு தளத்தை படுக்க வச்சதே நீங்க தான் போல:))

காயத்ரி சித்தார்த் December 13, 2009 5:53 AM  

எதுக்கு வாழ்த்தனும்? உங்க ப்ளாக்கை முடக்கி வெச்சதுக்கா?? :))

சென்ஷி December 13, 2009 6:09 AM  

// காயத்ரி சித்தார்த் said...

எதுக்கு வாழ்த்தனும்? உங்க ப்ளாக்கை முடக்கி வெச்சதுக்கா?? :))//

வழிமொழிகிறேன் :))))))))

நீதான் பதிவே எழுதறதில்லையேண்ணே.. அப்புறம் எதுக்கு முடக்குறானுங்க?!

சுரேகா.. December 13, 2009 7:13 AM  

ஓக்கே..ஆதரவு ஆஜர்! :)

ஆனா...ஏன் இப்படி ஆச்சு?

இப்போ நம்ம மக்கள் நிறையப்பேருக்கு இது நடந்திருக்கே எப்படி? :(

ஆதிமூலகிருஷ்ணன் December 13, 2009 7:46 AM  

புது கடைக்கு வாழ்த்துகள் அண்ணே.!

மாதேவி December 13, 2009 7:50 AM  

"வாழ்த்து சொல்லிவிட்டு போங்க" வாழ்த்துக்கள்.

புதுகைத் தென்றல் December 13, 2009 8:02 AM  

valthukkal,

no e kalapai, computeruku juram vanthu ippathan sariyachu. athan

:))

நாணல் December 13, 2009 8:36 AM  

இலக்கியப் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா... :)

சின்ன அம்மிணி December 13, 2009 8:42 AM  

உங்களுதையும் கூகுள் தின்னுருச்சா. சீக்கிரமே திரும்பக்கிடைக்க வாழ்த்துக்கள்

க‌ரிச‌ல்கார‌ன் December 13, 2009 8:47 AM  

வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி December 13, 2009 9:13 AM  

வலைப்பூ சீக்கிரமே திரும்ப கிடைக்கட்டும். அதுவரைக்கும் இங்கே அடிச்சு ஆடுங்க:)!

வாழ்த்துக்கள்:)!

கண்மணி December 13, 2009 10:44 AM  

வைரஸ் காரணமாக இருக்காது.தமிழ்ப் பிரியன் 'ப்' காரணமாக கூகுள் தலையில் குட்டியிருக்கும்.:))
இப்பவும் அஃதே...;((

நட்புடன் ஜமால் December 13, 2009 2:00 PM  

புது வீட்டு வாழ்த்துகள்.

ஆயில்யன் December 13, 2009 2:14 PM  

//ராமலக்ஷ்மி said...

வலைப்பூ சீக்கிரமே திரும்ப கிடைக்கட்டும். அதுவரைக்கும் இங்கே அடிச்சு ஆடுங்க:)!//

பதிவே வர்லைன்னா நாங்க அடிப்போம் அப்பவும் நீங்கதான் ஆடணும்!

ஆயில்யன் December 13, 2009 2:15 PM  

// இலக்கியப் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா... :)

December 12, 2009 9:36 PM
Blogger சின்ன அம்மிணி said...

உங்களுதையும் கூகுள் தின்னுருச்சா.//

என்ன அம்மிணி வந்து “ஹைய்ய்ய் ஜாலி” ரேஞ்சுக்கு சொல்லிட்டு போயிருக்காங்க :))

முத்துலெட்சுமி/muthuletchumi December 13, 2009 6:51 PM  

புதிய பக்கத்துக்கு
வாழ்த்துக்கள்..
மீண்டும் பழசு கிடைக்க வாழ்த்துக்கள்


\\காயத்ரி சித்தார்த் said...
எதுக்கு வாழ்த்தனும்? உங்க ப்ளாக்கை முடக்கி வெச்சதுக்கா?? :))//

என்ன புத்திசாலித்தனம்.. :)

தஞ்சாவூரான் December 14, 2009 7:51 AM  

வாழ்த்துக்கள்!

பெரிய ஆளா இருந்தா இந்த மாதிரி நடக்குறது சகஜம்தான் :)

தொடருங்கள்!

அமுதா December 14, 2009 2:53 PM  

வாழ்த்துக்கள். பிரபலமானவங்களுக்கு தான் இந்த மாதிரி நடக்கும். நீங்க தொடர்ந்து கலக்குங்க...

புகழன் December 15, 2009 1:07 PM  

அய்யோ உங்க பதிவையும் தடை செய்து விட்டார்களா?
ரெம்ப பாவமா இருககு.

ஷாகுல் December 15, 2009 4:38 PM  

ஆதரவுதானே வழங்கிட்டா போச்சி

ஆமாம் எத்தன தொகுதி தருவீங்க.

துளசி கோபால் December 16, 2009 5:38 AM  

அதெல்லாம் தந்துருவோம்.

நோ ஒர்ரீஸ்.

கலக்குங்க!

About This Blog

About This Blog

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP