Thursday, December 31, 2009

2009 ல் இருந்து 2010 ஐ நோக்கி ஒரு ஓட்டம்

2009 ஆம் ஆண்டு கடந்து விட்டது.2010 ம் பிறந்து விட்டது. வருடம் ஒன்றுடன் வயதும் கூடி விட்டது. திரும்பிப் பார்க்க இயலாத வகையிலேயே 2009 கடந்து இருக்கின்றது. அதி வேகம் என்றே சொல்லலாம். 2009 ஆரம்பத்தில் இந்தியாவில் இருந்தேன். மீண்டும் செப்டம்பரில் இந்தியாவில் இருந்தேன். வழக்கம் போல் விடுமுறைகள் எப்பவும் போல வேகமாகவே கழிகின்றன. முதல் முறையாக முகம் தெரியாமல் பழகிய பதிவர்களை சந்திக்க கிடைத்த வாய்ப்புகள் மகிழ வைத்தன.

மதுரையில் சீனா சார், செல்வி ஷங்கர் அம்மா வீட்டிற்கு மனைவி, மகனுடன் சென்றது மிக மகிழ்ச்சியளித்த நாள். அதே போல் கோவையில் வடகரை வேலன், சஞ்சய், பரிசல், வெயிலான், கார்க்கி, கும்க்கி இவர்களுடன் கழித்த நாளும்.. இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டு இருப்பதே எனக்கு சுகமாகப் பட்டது. நன்றிகள் நண்பர்களே.

மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 2009 சிறப்பாகவே சென்றது. 2007 ல் குடும்பத்தில் நிலவிய கடும் குழப்பங்கள் 2008 ல் மங்கி, 2009 ல் குறைந்து விட்டன. நீறு பூத்த நெருப்பாக இருக்குமோ என்று தெரியவில்லை.. ;-)) ஆனாலும் சரிபாதியுடன் எந்த பிணக்கும் இல்லாத வருடம் என்பதால் மகிழ்ச்சியே.

சென்ற வருடத்தின் கடைசிப் பகுதிகள் மிக விரைவாக சென்று விட்டன. சென்ற வருடம் பதிவுகளும் மனதுக்கு திருப்தியடையும் வகையில் எழுதவில்லை. வேலைப் பளு அதிகமானதால் எழுதும் வாய்ப்புகளும் குறைந்து போய் விட்டன. மனதிற்குள் தோன்றி எழுத முடியாமல அல்லது ஓரிரு பாராக்களுடன் டிராப்ட்டிலேயே கலைந்து போன பதிவுகளும், சிறுகதைகளும் ஏராளம்.

மகள் பிறக்கும் நேரம் இந்தியாவில் இருந்தது மிக மகிழ்ச்சி அளித்த தருணம். அதன்பின் வேலை மாற்றத்தின் விளைவாக சவுதியில் இருந்து கத்தார் வர நேர்ந்து விட்டது. வேலை மாற்றத்துடன் பொருளாதார ரீதியாகவும் நல்ல மாற்றம் என்று சொல்லலாம். சென்ற வருட ஆரம்பத்தில் ஆரம்பித்த வீட்டு வேலை இதோ, அதோ என்று இந்த ஆண்டும் தொடர்கின்றது. இன்னும் விரல்விட்டு எண்ணக் கூடிய தினங்களில் முடிந்து விடுமாம்.

வீட்டு வேலை முடிந்ததும் அப்பாடா என்று இருக்குமா என்று தெரியவில்லை. ஏனைனில் இவ்வீடு எனது கனவு இல்லமாக அமையவில்லை என்பது முதல் காரணம். என் காதலியுடன் கனவில் வாழ்ந்த அந்த கனவு இல்லம் அமைக்க இவ்வீட்டை கட்ட செலவு செய்ததைப் போல நான்கு மடங்கு பணம் வேண்டுமாம்... எனவே இவ்வீட்டுடன் திருப்தி அடைந்து கொள்ள வேண்டியது தான் போல... ;-))

2008 உடைய கடைசியில் நினைத்தது போல 2009 லும் எந்த நூலையும் வாங்கவில்லை. இந்த ஆண்டாவது வருமானத்தின் ஒரு பகுதியில் நூல்களை வாங்க வேண்டும். இந்த நேரத்தில் என் துணைவியிடம் ’ஒரு வீட்டில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புக்காவது புத்தகங்கள் இருக்க வேண்டும்’ என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டது நினைவுக்கு வருகின்றது. அதுக்கெல்லாம் அஞ்ச முடியுமா? இனியாவது புத்தகங்களை சேகரிக்க துவங்க வேண்டும்.

வேறு 2010 க்கு என்று எந்த லட்சியங்களும், தீர்மானமும் இல்லை. வாழ்க்கையில் ஓட்டத்திலேயே துடுப்பைப் பிடித்து ஓட்டுவோம். சென்ற நாட்களில் எனது பதிவுகளை வாசித்தும், ஊக்கமூட்டியும் வந்த அனைவருக்கும் நன்றிகள். அதே போல் என்னுடன் தோழமையுடன் பழகி எனக்கு அனைத்து நேரங்களில் உறுதுணையாகவும், அறிவுரைகளையும் நல்கி வரும் அனைவருக்கும் நன்றிகள்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Happy New Year
நன்றி : Happy New Year

13 comments:

ஆயில்யன் December 31, 2009 8:10 PM  

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2010 :)

ஆயில்யன் December 31, 2009 8:13 PM  

//ஒரு வீட்டில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புக்காவது புத்தகங்கள் இருக்க வேண்டும்’ என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டது நினைவுக்கு வருகின்றது.//

யப்பா ராசா இதுக்குத்தான் அம்புட்டு ஆர்வமா விசாரிச்சியாப்பா!

ரைட்டு !

ராமலக்ஷ்மி December 31, 2009 8:27 PM  

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)!

சின்ன அம்மிணி January 1, 2010 1:57 AM  

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

SanjaiGandhi™ January 1, 2010 9:32 AM  

வாழ்த்துகள் அண்ணே.. வீட்டில் விடிய விடிய அடிச்ச அரட்டைகள் இன்னும் நினைவில்.. விரைவில் மீண்டும் வாருங்கள்..

ஷாகுல் January 1, 2010 11:14 AM  

Happy New Year for U and your family.

Allah may bless you.

cheena (சீனா) January 1, 2010 11:25 AM  

அன்பின் தமிழ்பிரியன்

மதுரையில் எங்கள் வீட்டிற்கு வந்த பொழுது மகிழ்ச்சி அடைந்தது நாங்கள் தான். இனிய சந்திப்பு.

2010ல் விரும்பியது கிடைக்க நல்வாழ்த்துகள்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

சுரேகா.. January 1, 2010 2:33 PM  

வாழ்த்துக்கள் ஜி..!

சென்ற வருடத்தை சிறப்பாக அசை போட்டிருக்கிறீர்கள்..

2010ல் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும்..!

நாணல் January 1, 2010 2:56 PM  

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

akila January 1, 2010 3:55 PM  

புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரா! காணாமல் போன மர்மம் என்ன?

gulf-tamilan January 1, 2010 4:29 PM  

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சுசி January 2, 2010 12:17 AM  

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

தமிழன்-கறுப்பி... January 2, 2010 9:26 PM  

சரி தல புத்தாண்டு வாழ்த்துக்கள்..

About This Blog

About This Blog

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP